BREAKING NEWS

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

போக்குவரத்து ஏ ஐ டி யூ சி மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 1.9.2019 அன்று 14வது ஊதிய ஒப்பந்தம்பேசி அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இடைக்கால நிவாரணம் ரூபாய் 1000 ம் வழங்கப்பட்டது.

 

 

தற்போதைய ஆட்சியில் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிய இன்னும் 45 தினங்களே உள்ளன. அடுத்த15 வது ஒப்பந்தம் 1.9.2022 ல் பேசப்பட வேண்டும். இந் நிலையில் பே மேட்ரிக்ஸ் முறையில் அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்,தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய பென்சன் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், கடந்த 2015 முதல் உயர்ந்துவிட்ட பழைய புதிய அகவிலைப்படி உயர்வு 82 மாத காலம் நிலுவையில் உள்ளதை உடனடியாக அறிவித்து அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன்கள் உடனே வழங்குவது, தற்போது காலிப் பணியிடங்களில் ஒப்பந்த முறையில் டெண்டர் விட்டிருப்பது ஏற்புடையதல்ல ஒப்பந்தத்திற்கு மாறானது எனவே ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கையில்,

 

 

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் முதல்வர் அவர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு அறிவிப்பதாக தெரிவித்து சென்றுள்ளார்.பேச்சு வார்த்தை முடிவிற்கு வராததால் தொழிலாளர்கள் வெறுப்பிலும், கோபத்தின் உச்சியிலும் உள்ளனர். இந்த நிலைமைகளில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் குறித்து ஏஐடியூசி சம்மேளனம் சார்பில் ஜீலை 20 ம் தேதி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஏஐடியூசி சம்மேளனம் அளித்துள்ள கடிதம், பேச்சு வார்த்தையில் கூட்டமைப்பு முடிவுகளில் இனியும் காலம் தாழ்த்தாது தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வருகின்ற ஜூலை 25ஆம் தேதி அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் மாநிலந்தழழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஜீலை 25 திங்கட்கிழமை காலை 11மணிக்கு தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளைகள் முன்பு முதல்வர் தலையிட வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் சங்க பேதம் பாராமல் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஏஐடியூசி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். செய்தி:: துரை.மதிவாணன், மாநில துணைத் தலைவர் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம்.ஏஐடியூசி.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )