மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபள்ளி ஊராட்சியில்
மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபல்லி ஊராட்சியில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வழி விட மறுப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இது குறித்து விரிவாக விசாரித்ததில் பொதுமக்கள் கூறியதாவது அரசு ஓடை புறம்போக்கு சர்வே எண்:162,164 உள்ள பாதையை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
அதனை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து காணிக்கல் நட்டு உள்ளதால் ஓர் வண்டி சென்றால் மற்றொரு வண்டி ஒதுங்க கூட இடம் இல்லாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த ஓடை புறம்பொக்கு பாதையை சர்வே செய்து (ஆய்வு செய்து) அகலப்படுத்தி மக்களுக்கு மீட்டுத்தரவேண்டும் எனவும் மக்கள் பயன்படுத்தும் அரசு பொது நடைபாதை சர்வே எண் 153, 154 இல் உள்ள வழியை ஆக்கிரமிப்பு செய்து மழை நீர், கழிவுநீர் நீர், பாம்புகள், புதர்செடிகள், பூச்சிகள், குப்பைகள் கொட்டும் இடத்தில் காணிக்கல் நட்டு கால்வாயில் நடைபாதை அமைத்துள்ளனர் தனி நபர்கள். இந்த சர்வே எண் நிலத்தை சர்வே செய்து அளவீடு செய்து மீண்டும் பழைய நடைபாதையை அமைத்து மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த சர்வே எண்ணில் உள்ள பாதையை பால்ராஜ், அதியம்மா, ரவி, சேகர்,சாந்தி ஆகியோர் சேர்ந்து 1991 முதல் இருந்த நடைபாதையை மூடிவிட்டனர்.
இது குறித்து குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியர் அனைவரையும் விசாரித்து வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் இடத்தை நேரில் பார்வையிட்டு நடைபாதையில் உள்ள மரங்கள், வீடுகள், செடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி விட்டு நடைபாதை அமைத்து கொடுத்து தகவல் தெரிக்கை வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அவர்கள் செய்யவில்லை. இந்த நடைபாதை சர்வே எண்:153, 154 மீது 1991-ம் வருடம் குடியாத்தம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 30.12.2003 ஆம் வருடம் எனக்கு 10 லிங்ஸ் அகலம் நடைபாதை என்று தீர்ப்பாகிவிட்டது. வரதாரெட்டிலபல்லி கிராமத்திலிருந்து குடியாத்தம் சித்தூர் மெயின்ரோடுக்கு செல்லும் அரசு பொது நடைபாதை வழியாகும்.
இந்த தாவா சொத்தில் பிரதிவாதிகள் மூவர்களோ, அவர் ஆட்களோ எந்த நாளிலும் இடையூறு செய்யக்கூடாது என்று தீர்ப்பு வந்தது. இந்த நடைபாதையில் 3, 4 வீடுகள், 4, 5 மாட்டுப்பட்டிகள், 10, 15 விவசாய நிலங்கள் உள்ளன. இந்த வழியில் தான் சென்று வரவேண்டும், வேறு வழியில்லை, விவசாய நிலங்களுக்கு டிராக்டர் எடுத்து உழுவதற்கும் பயிரிடும், தானிங்கள், காய்கறிகள், விற்பனை செய்ய எடுத்து செல்ல முடியாமல் மக்கள் தலைமேல் சுமந்து எடுத்து செல்லும் அவல நிலை தான் தொடர்ந்தபடி உள்ளது. இதை அரசு வண்டி பாதையாக மாற்ற வேண்டும்.
வண்டிபாதையாக மாற்றியருந்தால் விவசாய மக்களுடைய துன்பங்கள் தீர்ந்து இருக்கும்.மேலும் ஏரிக்கு செல்லும் மழைநீர் கானாறு சர்வே எண்: 165 உள்ள காணாற்றை தடுத்து ஏரிக்கு மழைநீர் செல்லாமல் தடுத்துவிட்டனர்.
எரிக்கு மழைநீர் செல்லாததால் நிலத்தடி நீர் உயராமல் விவசாயம் வரும் காலங்களில் தடைபட்டும். விலைவாசி அதிகரிக்கும், எனவே மீண்டும் ஏரிக்கு மழைநீர் செல்ல கானாற்றை மீட்டுத்தரவேண்டும்.மலையில் தீபம் ஏற்றும் ஓடைபாதை சர்வே எண்: 152, 168-ல் உள்ள நிலத்தை அபகரித்து மாமரங்கள் வைத்துள்ளனர்
இந்த ஓடை பாதையை அளவீடு செய்து மீண்டும் தீபம் ஏற்றும் பாதை உருவாக்கி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த புகார் பற்றி பலமுறை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுக்கின்றனர் எனவும் கூறினர்.
எனவே வேலூர் மாவட்ட ஆட்சியர் இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை மற்றும் ஏரிக்கு மழை நீர் செல்லும் கானாற்றை மீட்டு தந்து உதவி செய்ய வேண்டும் என்பதே வரதாரெட்டிபல்லி பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது .