BREAKING NEWS

மணல் கொள்ளையை கண்டித்து தேமுதிக, தலைமையில் அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் கொள்ளையை கண்டித்து  தேமுதிக, தலைமையில் அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மரூர் சாத்தனூர் உள்ளிட்ட ஊர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

மணல் குவாரியில் கொள்ளிடம் ஆற்றில் கனிமம் முறைகேடு கொள்ளையை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தக் கோரி தேமுதிக ஒன்றிய குழு உறுப்பினர் தீபா சுரேஷ்குமார், தலைமையில் வடுவக்குடி,அரசு மணல் குவாரி முன்பு அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்ட ஆர்ப்பாட்டத்தில் மணல் விநியோக முறைகேட்டை தடுத்து நிறுத்தவும். அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான அரசு குவாரி மணல் வருவாயை தனியார் கொள்ளை அடிக்கும் உரிமையை நிலை நிறுத்தவும். ஆன்லைன் அல்லாத மணல் விநியோக முறைகேட்டில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் அரசு நிர்ணயம் செய்த 80 லாரிகள் விட 600 லாரிகள் வரை மணல் அள்ளுவதை கண்டித்தும் கொள்ளிட கரையோர குடியிருப்பு விவசாய மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )