BREAKING NEWS

மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.

மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார் நகைக்காக பெண்ணை அடித்துக்கொண்டது அம்பலமாகியுள்ளது.

 

நல்லூர் வில்வினேஸ்வரர் கோவில் அருகே மணிமுத்தா ஆற்றில் கடந்த 18ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார் அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

 

அதன் பெயரில் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் அந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சிகுர் கிராமத்தைச் சார்ந்த கந்தசாமி மனைவி நல்லம்மாள் வயது 60 என்பதும் அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி புது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் வயது 61 என்பவர் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

 

இதனை தொடர்ந்து ராஜதுரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் நல்லம்மாள் நல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 29 கிராம் நகைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

 

இதை எடுத்து ராஜதுரை போலீசார் கைது செய்தனர் இது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )