BREAKING NEWS

மதுபாட்டிலுக்குள் உயிரிழந்த குட்டித்தவளை!!

மதுபாட்டிலுக்குள் உயிரிழந்த குட்டித்தவளை!!

திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டிலை வாங்கிய ஒருவர், அதில் குட்டித்தவளை ஒன்று செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டி. 51 வயதான இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.

மதுபானபாட்டில்

பாண்டி இன்று நெல்லூர் அருகில் உள்ள சித்தரேவு அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார். ரூ.150 கொடுக்கு குவாட்டர் மதுபான பாட்டிலை வாங்கியுள்ளார். அதன் பின்னர் மதுபானத்தை குடிப்பதற்காக அதை திறக்க முற்பட்ட போது, பாட்டிலின் உள்ளே ஏதோ ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அது என்னவாக இருக்கும் என்று உன்னிப்பாக பார்த்த போது அது ஒரு இறந்து போன குட்டித்தவளையின் உடல் என்பது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, இது குறித்து சித்தரேவு டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாண்டிக்கு சரியான முறையில் பதில் அளிக்காமல், வேறு பாட்டில் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று சமரசம் பேசி உள்ளார். இதனால் டாஸ்மாக் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் பாண்டி விற்பனையாளரின் பேச்சை கேட்காமல் தவளை மிதந்த பாட்டிலை அவரிடம் கொடுக்காமல் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளார். மதுபான பாட்டிலுக்குள் குட்டித் தவளை மிதந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மதுபான பாட்டிலுக்குள் குட்டித்தவளை மிதந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )