மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு:-

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி மயிலாடுதுறை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திரளான தொண்டர்கள் கோஷங்களையும் எழுப்பினர். தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து ஏராளமானோர் முழக்கங்களை எழுப்பினர் .
இதில் மாவட்ட அவைத்தலைவர் பிவி.பாரதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி மா.சக்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.