BREAKING NEWS

மயிலாடுதுறை அருகே 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மறையூர் தாமரைக் குளம் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கணபதி.59.விவசாயி.. இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூம் கதவைத் திறந்து உள்ளே இருந்த பீரோவில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

இதுபோல அதே ஊரில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவரும் வெளிநாட்டில் பணியாற்றுபவருமான கோவிந்தன் என்பவரது மனைவி கோகிலா.45.இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் தேதி சென்றுள்ளார்.

 

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூமில் இருந்த 2 பீரோல்களையும் உடைத்து அதிலிருந்து ரூ 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்

 

.தகவல் அறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி.சஞ்சீவ் குமார் தலைமையில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

 

மறையூர் கிராமத்தில் 2 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS