மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1743 வாக்குசாவடி மையங்களிலும் வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணி முதல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ஜமாலியா முஸ்லிம் உதவி துவக்க பள்ளியில் வார்டு 14 ல் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புக சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தனது குடும்பத்தினருடன் சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் தரங்கைப் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் வாக்குச்சாவடியில் அதே பள்ளியில் வார்டு 14 ல் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்
CATEGORIES மயிலாடுதுறை
TAGS மயிலாடுதுறை