BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரையில் காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழியில் சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி மற்றும் அங்காளம்மன் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

 

 

ஆய்விற்கு பின் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

 

மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் 10 பணிகள் ரூ.60 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு கடந்த 23.06.2022 அன்று நடைபெற்றது. அதனையொட்டி கோயில் வளாகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீர்காழி அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயிலில் 16 பணிகள் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

 

 

இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று 6 மாத காலத்திற்குள் குடமுழுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.12 கோடி செலவில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதற்கு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பணி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கோயிலில் வரைப்படத்தை வைத்து ஆய்வு செய்யப்பட்டது.

 

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு நில அளவை கற்கள் தயார் செய்யும் பணி ரூ.32 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உதவி பெரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சுவர், வண்ணம்பூசுதல், கழிப்பறை வசதி கட்டுதல். விளயாட்டு மைதானம் மேம்படுத்துதல் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

 

மேலும் கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக் குளம் பழுது பார்த்து புதுபிக்கும் பணி 29 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. திருக்கோயில் திருக்குளம் அமையவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து திருக்குளம் எவ்வாறு கட்டப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி திருக்கோயிலில் நிலங்கள் அளவீடு செய்யபட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 

இவ்ஆய்வின்போது, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திருப்பணி) பொன்.ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (மயிலாடுதுறை) மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )