மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கடையூரில் உள்ள தொடக்க வேளாண்மை அலுவலகத்தில் குடும்பத்துடன் வாடகை பாத்திர வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கடையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வாடகை பத்திரக்கடை நடத்தி வருபவர் காமராஜ் தனது மனைவி தாமரைசெல்வி, தாய் சுகுணா மகன் விக்னேஷ்வரன் உள்பட மூன்று பேருடன் திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு வந்தனர் அங்கு வந்த அவர்கள் திடீர் என தாங்கள் வைத்திருந்த மண்ணெண்னையை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பொறையார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் வைத்திருந்த கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி பத்திரமாக மிட்டு பின்னர் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தீக்குளிக்க முயன்ற நபர் காமராஜ் என்பவர் கூறியதாவது: திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக துர்காதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு எனது மகன் விக்னேஷ்வரனுக்கு அரசுவேளை வாங்கி தருவதாக இத்தனை தொடர்ந்து காமராஜ் 16லட்சத்து 40000ரூபாய்யை துர்காதேவியிடம் கொடுத்துள்ளார் .

இதனை அடுத்து காமராஜ் பலமுறை பணத்தை கேட்டபோது தொடர்ந்து துர்கா தேவி அலை கழித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ் திருக்கடையூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வாங்கி அலுவலகத்தில் துர்காதேவி வேலை பார்க்கும் அலுவலகம் முன்பு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்தோம் இவ்வாறு துர்கா தேவியிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த காமராஜ் கூறினார். இது குறித்து பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகை பத்திர வியாபாரி தொடக்க வேளாண்மை அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
