மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா த.பே.மா.லு கல்லூரி பட்டமளிப்பு விழா :

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூன்-11 சனி கிழமை நடைபெற்றது, கல்லூரியின் கலையரங்கில் நடைப்பெற்ற இவ்விழாவில் 685 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் அறிவியல் , முதுகலை அறிவியல், மற்றும் ஆய்வியல் நிறைஞர் உள்ளிட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டிணம் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன் வளப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.சுகுமார், கல்லூரியின் காசாளர் பொறியாளர் தியாகராஜன், கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களையும் ,பரிசுகளையும் வழங்கினர்,


கல்லூரி துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை
