BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம்

 

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் முன்னில வைத்தார், செயல் அலுவலர் பூபதி. கமலக்கண்ணன் வரவேற்றார்.

 

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

 

 ஆனந்தி: ஐந்தாவது வார்டில் வ உ சி தெருவில் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்காய்மால் இருக்க சாலையை சீரமைக்க வேண்டும்.

 

பாரதியார் வீதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு கூடுதலாக குடிநீர் குழாய் அமைப்பு தர வேண்டும்.

 

ஜோன்செல்லப்பா: 9 வது வார்டில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபயம் உள்ளதால் தரமான கொசு மருந்துகளை வாங்கி பயன்படுத்தி கொசுக்களை அழிக்க வேண்டும்.

 

 

மேலுக்கு பேரூராட்சி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துகிறது. வேலு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு ஏற்படும் சம்பவம் நடப்பதால் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

 

அனார்கலி:16 வது வார்டில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், மேலும் இந்த பகுதியில் வெறி நாய்கள் சுற்றி தெரிவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

 

சுந்தரமூர்த்தி:17வது வார்டு மரகத காலணியில் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும். பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலக ஊழியர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று பேசினார்.

 

பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கர் பேசுகையில்: தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளில் மக்களை சந்தித்து சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை விரைவில் சீர் செய்து தரப்படும் என்று பேசினார்.

முடிவில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )