மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்- பொதுமக்களுக்கு அழைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள விமலாம்பிகை திருமணமண்டத்தில் வருகின்ற 13.07.2022 அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும் குறை தீர்ப்பு முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த துணைகாவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்களும் கலந்து கொள்கின்றனர். மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்தை சார்ந்த பொது மக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களுடன் கலந்துகொண்டு பயன் பெற வேண்டுமாய் மாவட்ட காவல்துறை சார்பில் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
