மரக்கன்றுகள் நடும் விழா.இயற்கை வளங்களை மேம்படுத்தும் எம்எல்ஏ தமிழரசி இரவிக்குமார்.
செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மேலப்பசளை ஊராட்சி ஒன்றியத்தில் இயற்கை வளங்களை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் மாணவச் செல்வங்களுடன் மரக்கன்றுகளை நட்டார்.
இதில் மேலப்பசளை, ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன் , பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும், ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும். மரக்கன்றுகளை நட்டனர்.
இதை தொடர்ந்து மேலப்பசலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இன்று ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜாசேகரன் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆசிரியர் கந்தசாமி பள்ளி குழந்தைகளுடன் பள்ளியின் வளாகத்தை சுற்றி மரக்கன்றுகளை பெற்றோர்களும் கலந்து கொண்டு நட்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மானாமதுரைமானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார்மேலப்பசளை ஊராட்சி