மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு.. விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொப்பளான் ஏரி உள்ளது. ஏரியின்மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையிலேயே முழு கொள்ளவை எட்டியிருந்த நிலையில் தற்போது மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் மாவட்டம்முழுவதும் கடந்த இரண்டு தினங்கள் பெய்த கனமழையினால் மீண்டும் கொப்ளான் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக ஏரியின் மதகு உடைந்தது.
இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள 97ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந் துள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வெளியேரும் நீரை தடுப்பதற்க்கான ஏற்பாடுகளை விரைந்து செய்து வருகின்றனர். ஏரி உடைப்பு ஏற்ப்பட்டதை காண அப்பகுதி மக்கள் வருகை அதிகரிப்பதை தடுக்க அதிகளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.