மலைவாழ் மக்கள் கிராமமான பொன்னாலாம்மன் சோலைக்கு பஸ் வசதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பொன்னாலம்மன் சோலைக்கு பஸ் வசதியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமூர்த்தி மலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொன்னானலம்மன்சோலை மலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர் இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
உடுமலை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சாம்பல் மேடு அல்லது பொன்னாலம்மன்சோலை பாலம் பகுதிக்கு வந்து பஸ்ஸில் ஏறி வந்தனர் எனவே பொன்னாலம்மன் சோலைக்கு பஸ் இயக்க வேண்டும் என சுமார் 70 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வும் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராருமான ரா.ஜெயராம கிருஷ்ணனிடம் மனு அளித்து வலியுறுத்தினர் இதையடுத்து அவரது முயற்சியின் காரணமாக தற்போது பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது திருமூர்த்தி மலையில் நடந்த விழாவில் தலை வாய்க்கால் முதல் பொன்னாலம்மன் சோலை முள்ளுபட்டி கோழிப்பண்ணை வரை அரசு பஸ் சேவையை அமைச்சர்கள் மு.பெ சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறுவார்கள் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினீத் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முதன்முறையாக தங்கள் கிராமத்திற்கு பஸ் இயக்கப்படுவதால் பொன்னாலம்மன் சோலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
