மாசில்லா பூமியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசில்லா பூமியை உருவாக்கும் வகையில், மரங்களை நட வேண்டும் என்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் கடையநல்லூர் நகரில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கடையநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் வனசரகர் சுரேஷ், கடையநல்லூர் சார்பு ஆய்வாளர் கனகராஜ் மற்றும் பள்ளி முதல்வர் அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
CATEGORIES தென்காசி
