மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தமிழ்நாடு ஆணழகன் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தனியார் மஹாலில் ஸ்ரீ தனலட்சுமி நினைவு பவுண்டேஷன் சார்பில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள சென்னை கோயமுத்தூர் மதுரை திருச்சி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட 55 கிலோ முதல் 80 கிலோ மேல் எடை கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
55,60,65,70,75,80 கிலோ எடை கொண்ட ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு முதலில் வெற்றி பெற்றவர்களை இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இறுதிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் முதலில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மணிகண்டனுக்கு சாம்பியன்ஷிப் கோப்பை சான்றிதழ் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி டிவி பரிசாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான இளைஞர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர்.