BREAKING NEWS

மானாமதுரை அடுத்த கட்டிகுளம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நாகம் பாம்பு நடனமாடிய அற்புத காட்சி.

மானாமதுரை அடுத்த கட்டிகுளம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன்  ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நாகம் பாம்பு நடனமாடிய அற்புத காட்சி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அருகே கட்டிகுளம் கிராமத்தில் வரும் ஸ்ரீ திருவேட்டை அய்யனார் அருளாசியில் பரிவாரங்களாக அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோயில் ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சில் மானாமதுரை கட்டிகுளம் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பக்தகோடி பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதற்காலம், இராண்டம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் யாகசாலை பூஜையில் ஸ்ரீ மணிகண்ட சுவாமிகள் யாகசாலை பூஜை நடத்தினர். இந்த நான்கு கால பூஜையில் மங்கள இசை, தீர்த்த பூஜை கும்ப அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகாலட்சுமி பூஜை, கணபதி ஹோமம் ஸ்ரீ முலமந்த்ர ஜெப ஹோமம், ஸ்ரீ காயத்ரி ஹோமம், ஸ்ரீ குபேர ஹோமம், போன்ற பல யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்த சிறப்பான கும்பாபிஷேக பூஜை விழாவில் நாகம் படம் எடுத்து ஆடிய அற்புத காட்சி கட்டிகுளம் கிராம மக்கள் ஆர்வத்துடன் வியந்து பார்த்து தரிசனம் செய்தனர் பாம்பு நாகத்துக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

சுற்றுவட்டார கிராம பகுதியில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரன் அருளாசியை பெற்று சென்றனர் கோயிலில் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )