மானாமதுரை அருகே மின் வெட்டால் அவதி படிக்கும் மாணவர்கள் வேதனை .

மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணணூர் கிழவிகுளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு தொடர்ந்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரமின்றி பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியால் அவதிப்படுகின்றனர்.
இதன் காரணமாக செல்போன்களை ரீசார்ஜ் செய்ய கூட மின்சாரமில்லாமல் பக்கத்து கிராமங்களுக்கு படை எடுக்க வேண்டி நிலைமை உள்ளதாக மாணவர்கள் வேதனைதெரிவித்து வருகின்றனர். இதனால் நகர்புறங்களில் மின் வெட்டை சரிசெய்வதை போல் கிராமபுறங்களில் சரிவர மின் வெட்டுகளை கவனிப்பதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Uncategorized