மாமூல் வாங்கிக் கொண்டு மண்கடத்தலை ஊக்குவிக்கும் தீபலஷ்மிக்கு காப்பு கட்டுவரா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி!

கொள்ளைபோகும் கனிம வளங்களை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என வேலூர் வட்டம் ,கணியம்பாடி புதூர் கிராம பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் அப்பகுதியில் வருவாய் துறையினர் துணையுடன் மண் கடத்தப்படுவதாக ஆதாரங்களுடன் புகாரளித்தனர்.
அப்புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த தீபலஷ்மி மண் கடத்தும் புள்ளிகளை சந்தித்து கரன்சி வசூலித்ததுதான் வேடிக்கை என்கிறது புதூர் கிராம வட்டாரம்.
கணியம்பாடி புதூர் கிராமம் மேட்டுத்தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் கதிர்வேல் அரசு புறம்போக்கில் மண் வாரி அங்கேயே சூளை போட்டும் மற்றும் விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்ததன் பேரில் கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் தீபலஷ்மி ஆய்வு என்ற பெயரில் நேரடியாக சென்று பணம் வாங்கிக்கொண்டு புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் மண் திருடுபவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அறிக்கை அனுப்பியுள்ளார். அவர் இன்று பணம் பெற்றபோது எடுத்த படம்
மண், மணல் கடத்தும் புள்ளிகளிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் தங்களின் வசூல் வேட்டைகளை செய்து வருவதுடன் யாரேனும் புகாரளித்தால் அவர்களை ஆட்களை வைத்து மிரட்டுதலை வாடிக்கையாக கொண்டவர்.
அதரவற்றோர் உதவித்தொகை மனுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மனுக்கள் போன்றவற்றிற்கு கரன்சியை கண்ணில் காட்டவில்லை என்றால் அதை குப்பையில் போடுவதும் தகுதியிருந்தும் அதனை வழங்க பரிந்துரை செய்ய மாட்டார்.
வருவாய்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் அவர்களால் பரிந்துரை செய்து வழங்க வேண்டிய சான்றுகள் மற்றும் ஆய்வு செய்து அனுப்பவேண்டிய மனுக்கள் என எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே வழங்கப்படுவதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருபவர் கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் தீபலஷ்மி .
அரசின் சார்பில் இலவச மனைப்பட்டா வழங்கிடவும், மண் கடத்தல் மற்றும் மணல் கடத்தல், மாடு விடும் விழாக்கள் என எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்தால் அனைத்திற்கும் கையெழுத்து போடுவார்.
அரசின் சார்பில் இலவச மனைப்பட்டா வழங்கிடவும் மண் கடத்தல் மற்றும் மணல் கடத்தல் மாடு விடும் விழாக்கள் என எதற்கெடுத்தாலும் பணம் கொடுத்தால் அனைத்திற்கும் கையெழுத்து போடுவார்.
வாரிசு சான்றிதழ் வழங்க புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார் வரை லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் ஏரிகளிலும் மணல் கனிமவளங்களை சுருட்டுபவர்களிடமிருந்து மாட்டு வண்டியில் மணல் கனிமவளங்களை கொள்ளையடிக்கும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார் வடிவேலு வரை லஞ்சம் சேரவேண்டிய மாமூல் படுகச்சிதமாக வந்து சேர்ந்து விடுகிறது.
மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா நேரில் ஆய்வு செய்து களையெடுப்பார்களா?.