மாவட்ட ஆட்சியர்யிடம் தேமுதிக சார்பில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் 7வது வார்டு உறுப்பினர் K.சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 563க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது மேலும் 11மற்றும் 12ஆம் வகுப்புகள் படிக்க சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்கு 6 மணி ஆகி விடுவதால் பெண் பிள்ளைகள் அவ்வளவு தூரம் செல்ல முடியாத காரணத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர் அதற்கான காரணம் போதிய பேருந்து வசதி மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் பெண் பிள்ளைகளை அவ்வளவு தூரம் அனுப்புவதற்கும் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சில பெற்றோர்கள் தயங்குகின்றனர் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 100%விதத்தில் 40% சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளி படிப்பை தொடர்கின்ற நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி ஆதியூர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற தமிழக அரசுக்கும் கல்வித்துறைக்கும் கவனத்தில் கொண்டு சென்று தரம் உயர்த்த வேண்டும் என தேமுதிக சார்பில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் ஆதியூர் ஊராட்சி மன்ற 7வார்டு உறுப்பினர் K.சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு அளித்தார் .