BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

 வேலை வாங்கித் தருவதாக ரூ.1.70 கோடி மோசடி.

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவில் வேலை வாங்கிதருவதாக கூறி போலியான பணிநியமன ஆணை கொடுத்து ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம்: பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் தனது அண்ணனுக்கும் தெற்கு ரயில்வேயில் உதவி பொறியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை சிலர் வழங்கி ஏமாற்றி விட்டனர்.
வேலை தேடிக்கொண்டு இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 கோடியே 70 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்று தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரை கைது செய்தனர்.
விசாரணை செய்ததில் ஜெயகாந்தன், தான் தெற்கு ரயில்வேயில் கபடி பயிற்சியாளராக பணிபுரிவதாகவும், தெற்கு ரயில்வேயில் Station Master, JE, AE, Ticket Section, Mechanic, RPF போன்ற வேலைகளுக்கு, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவில் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 43 பேரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.கைதான ஜெயகாந்தனிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள் மற்றும் அது தொடர்பான போலி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்த காவல் ஆய்வாளர் ரெஜினா மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வழங்குவதில்லை.ஆகவே, வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ,
ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்” சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் முதல் கட்ட கலந்தாய்வில் 7,254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன எனவும், சுயநிதி கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் மூன்று இடங்கள் காலியாக உள்ளது என மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிஇதைத் தொடர்ந்து பிப்ரவரி ஏழாம் தேதி சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்க்க 6082 பேருக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டது. 12ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்ததுடன், 14ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 6658 மாணவர்கள் சேர்ந்தனர்.இந்த நிலையில் மீதமுள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு 14ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதற்காக தரவரிசைப் பட்டியலில் 24 ஆயிரம் வரையில் இடம் பெற்றிருந்த மாணவர்களில் இனவாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இதன் மூலம் 596 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 21ஆம் தேதிக்குள் மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 7825 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 2060 இடங்களும் என மருத்துவப் படிப்பில் 9885 இடங்கள் உள்ளது. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 856 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 30 இடங்களும் அளிக்கப்படுகிறது.சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 1169 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 573 இடங்களும் உள்ளன.
எம்பிபிஎஸ் படிப்பில் 5800 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1454 இடங்களும் என அரசு ஒதுக்கீட்டில் உள்ள 7257 இடங்களுக்கு முதல்கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் எம்பிபிஎஸ் படிப்பில் 5800 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1454 இடங்களும் நிரப்பப்பட்டன. முதற்கட்டக் கலந்தாய்வில் சுயநிதி மருத்துவக்கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் 3 இடங்கள் மட்டும் காலியாக உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட இடங்களின் விபரம் வருமாறு:இதர வகுப்பினர் 2250, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1922, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் 255, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் 1452, ஆதிதிராவிடர் 1095, ஆதிதிராவிடர் அருந்ததியர் 208, பழங்குடியினர் 72 என 7254 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

சிறுபான்மை கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2021-2022ஆம் ஆண்டுக்கான சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள கிறிஸ்தவ மைனாரிட்டி விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மைனாரிட்டி தகுதி பட்டியலில் இடம் பெறாத விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு நேட்டிவிட்டி சான்றிதழ் மற்றும் கிறிஸ்தவ மைனாரிட்டி சான்றிதழையும் scugdocuments@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் விண்ணப்பத்தின் எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.அதற்கு பிறகு பெறப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பிறகு கிறிஸ்தவ மைனாரிட்டி தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2001 மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் தெலுங்கு மைனாரிட்டி 5 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு 503 மாணவர்களும், மலையாளம் மைனாரிட்டியில் உள்ள 56 மாணவர்களும் தங்களுக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )