மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது.
மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தனூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வு பிரிவு போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் அடுத்த குத்தனூர் பிள்ளையார் கோயில் அருகே அதிகஅளவில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் சரக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸார்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில், காஞ்சிபுரம் சரக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு ஆய்வாலர் செந்தில்முருகன், உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் சோதனை செய்ததில் அங்கு சுமார் 20 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அன்சல்(23), காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமதுசித்திக்(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கேரள மாநில பதிவெண் கொண்ட இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும், கைது செய்யப்பட்டவர்களையும் ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வு பிரிவு போலீஸார் மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
CATEGORIES காஞ்சிபுரம்