மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் சத்யா நகர் பகுதியில் மர்ம நபர்கள் விநாயகர் மற்றும் சிவலிங்க சிலைகளை உடைத்து உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் சத்யா நகர் பகுதி அமைந்துள்ளது இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மின் விளக்கு மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி வருவதாகவும் இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் பழமையான கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் சிவலிங்க சிலைகளையும் அந்த மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர்.
இதனை அடுத்து இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்வதற்கு பயமாக உள்ளதாக கூறிய பொதுமக்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சத்யா நகர் பொதுமக்கள் தென்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
CATEGORIES தேனி