மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் கிராமத்தை சேர்ந்த ரவுடி பி பி ஜி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கம்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் கிராமத்தை சேர்ந்த ரவுடி பி பி ஜி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்.
இவர் தற்போது பாஜக கட்சியின் தமிழ் மாநில பட்டியலின பொருளாளராக உள்ளார். இவர் தற்போதைய வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
இவர் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ரவுடி பி பி ஜி குமரனின் நெருங்கிய நண்பராகவும் உறவினராகவும் இருந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சங்கர் மீது 15 முதல் தகவல் அறிக்கையும் 3 குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சங்க தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தன
இதில் பெரும்பாலும் சங்கர் பினாமி பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது
ரவுடியாக இருந்து பலரது நிலங்களை அபகரித்து தனது பினாமி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்
சட்டபூர்வமாக நேரடியான தொழில் செய்து இந்த சொத்துக்களை வாங்காதது தெரியவந்துள்ளது
இந்த பினாமி சொத்துகள் குறித்து எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
சொத்துக்களை வாங்க கொடுக்கப்பட்ட பணம் தொடர்பாக எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து விசாரணையில் விளக்கம் அளிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சொத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்று பினாமி பெயரில் உள்ள சொத்துக்களை வாங்கிக் கொடுப்பது தெரிய வந்துள்ளது.