மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் கூடலூர் குள்ளப்ப கவுண்டன் பட்டியில் பெண்ணொருவர் கொலை வீட்டில் குழி தோண்டி புதைத்த சம்பவத்தில் உறவினர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியல்.
கூடலூர் கவுண்டன் பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முத்துப்பேச்சி அரசு கள்ளர் பள்ளி தெருவில் குடியிருந்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூடலூர் காவல் நிலையத்தில் முத்துப்பேச்சியின் தந்தை மாரியப்பன் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் முத்துப்பேச்சியை கொடுத்தல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மதுபோதையில் கொலை செய்து தனது வீட்டில் புதைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மனோஜ் கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மனோஜ் இடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இறந்த பெண்ணின் அக்கா கணவர் முருகன் என்பவர் இந்தக் கொலையில் மேலும் நான்கு நபர்கள் தொடர்பு இருப்பதாகவும் மாடு திருடிய கூட்டுக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள் வைத்திருந்த பணங்களை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறி கூடலூர் காவல் ஆய்வாளர் முத்துமணியிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாருக்கு ஆய்வாளர் முத்துபேச்சி பல நபர்களுடன் தொடர்பு இருக்கிறது என்றும் கொலை செய்த மனோஜ் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.பின்பு கூடலூர் காவல் ஆய்வாளரை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து மற்ற குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.