மாவட்ட செய்திகள்
ஆத்தூர் அருகே நள்ளிரவில் கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலில் மூன்று இலட்சரூபாய் காணிக்கை பணம் கொள்ளை.
ஆத்தூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை, உண்டியலில் இருந்த மூன்று இலட்சரூபாய் காணிக்கை பணம் கொள்ளை, போலீசார் விசாரணை,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பழைமையான பிள்ளையார் கோவில் உள்ளது, இதனிடையே நேற்றிரவு கோவில் பணிகளை முடித்து கொண்டு வீடு திரும்பிய அர்ச்சகர் கோபி இன்று பூஜை செய்வதற்காக காலை கோவிலை வழக்கம் போல் திறக்க வந்துள்ளார்,
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுனுள் சென்று பார்த்த போது நள்ளிரவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது, இதே போல் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் அம்மம்பாளையத்தில் உள்ள சிவன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபரகள் உண்டியலை உடைத்து அதிலிருந்த மூன்று இலட்ச ரூபாய் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை சுடுகாட்டு பகுதியில் வீசிச் சென்றது தெரிய வந்தது,
இதனையடுத்து கோவில் அர்ச்சகர்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர், அடுத்தடுத்த மூன்று கோவில்களின் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,