மாவட்ட செய்திகள்
நத்தம் அருகே காரில் கஞ்சா கடத்தியவரை துரத்தி பிடித்த எஸ்பி தனிப்படையினர் -140 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த சமுத்திராப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.பி தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் மாரிமுத்து, சேக்தாவூத் மற்றும் காவலர்கள் வேகமாக வந்த காரை நிறுத்தியபோது நிறுத்தாமல் வேகமாக சென்றது அந்த காரை துரத்தி சென்று செந்துறை சாலையில் அருகே மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து கஞ்சா கடத்திய அஞ்சுகுழிபட்டி யை சேர்ந்த குணசேகரன் வயது (37) என்பவரை கைது செய்து 7 மூடைகளில் வைத்திருந்த 13லட்ச ரூபாய் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்கிறார்கள்
CATEGORIES திண்டுக்கல்