மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் கொரனோ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு உதவி பொருட்களை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் கொரனோ டெங்கு போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் அன்றாடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்களின் தகவல்களை சேகரிப்பதுடன் அவர்களின் உடல் நலத்தையும் பரிசோதித்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை நகர போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உதவிப் பொருட்களை வழங்கி பணியாளர்களின் பணி சவாலானது மற்றும் போற்றுதலுக்கு உரியது என்று பாராட்டி பேசினார் இந்நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளர் ஞானசுந்தரி அறக்கட்டளை களப்பணியாளர் சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்