மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்.
பூலாம்பட்டி ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி..!
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா என்று அழைக்கப்படும் பூலாம்பட்டியில் நாள்தோறும் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அங்கு பொதுமக்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள். அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல்தெரிவித்தனர். அதனடிப்படையில், அங்கு விரைந்த பூலாம்பட்டி காவல்துறையினர் அந்த அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றி, எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.