BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக கண்ணின் உள்ளே ஊசி போடும் சிகிச்சை முறை அறிமுகம்

சர்க்கரை நோய் உள்ளவர்களில் பலருக்கு கண்களில் டயாபட்டிக் ரெட்டினோபதி எனப்படும் நோயின் ஒரு வகையான மேக்குலர் எடிமா என்ற ஒருவித பின்விளைவு ஏற்படுவது உண்டு விழித்திரையின் மையப் பகுதியான மேக்குலாவில் நீர் அதிகமாக கோர்த்துக்கொண்டு அப்பகுதி விழித்திரை வீக்கமாக காணப்படும் இதனால் நோயாளிகளுக்கு அதிக அளவு பார்வை குறைபாடு ஏற்படும் இந்த நீர்க்கோவை யை குறைத்து விழித்திரை வீக்கத்தையும் குறைப்பதற்கு கண்ணில் உள்ளே.

ரேனிபிஸ்மாம்ப் என்ற விலை உயர்ந்த ஊசி மருந்து சமீபத்தில் பயன்பாட்டில் உள்ளது பார்வை மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது இத்தகைய ஊசி முதன்முறையாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவில் சர்க்கரை நோயினால் கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நோயாளி கண்டறிந்து இந்த ஊசி செலுத்தி சிகிச்சை செய்யப்பட்டது .

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இந்த சிகிச்சையினை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் கேட்டுக்கொண்டதன் பேரில் கண் மருத்துவத் துறை பேராசிரியர் அமுத வடிவு இணைப்பேராசிரியர் ஷோபா மருத்துவர்கள் சிவக்குமார் முரளி ஆகியோர் செய்தனர் இவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )