BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் ஆழ்குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சென்னம் பூண்டி கிராமம் கரையோரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி, போன்ற ஊர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்
ராட்சச ஆழ்குழாய் அமைத்து
குழாய் மூலம் தண்ணீர் நிமிடத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் மேலும் 43 ஊர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கு ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் விவசாயிகளும் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே மூன்று இடங்களில் மணல் குவாரிகள் இருந்ததால் நிலத்தடி நீர் அதளபாதளத்திற்கு சென்றுவிட்டது. மேலும் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10.000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டது.

 

மேலும் நிலத்தடி நீர் காரத்தன்மை அதிகரித்து குடிக்க தகுதி இல்லாத தண்ணீராக மாறிவிட்டது. இந்த நிலையில் மீண்டும் 300 மீட்டர் அருகிலே புதிய ஆழ்குழாய் குடிநீர் குழாய் அமைத்தால் இந்த பகுதியில் மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும் என்றும் உடனடியாக தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் வீடுதோறும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்து மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டமும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

பேட்டி 01.ராஜேந்திரன் திருச்சென்னம் பூண்டி
02.ஜீவக்குமார் வழக்கறிஞர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )