BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டியருகே நூறு ஆண்டுகள் பழமையான கூடமுடையார், ஸ்ரீ முத்தையாசாமி கோவில் கும்பாபிஷேக விழா .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கூடமுடையார்சாமி மற்றும் ஸ்ரீ முத்தையாசாமி கோவில் கும்பாபிஷேகவிழா சிறப்பாக நடைபெற்றது . நேற்று மாலை 6 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வர பூஜையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்பு இரவில் தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது . இன்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு கணபதிஹோமம் முடிக்கப்பட்டு கடம் புறப்பாடு தொடங்கி கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . கும்பாபிஷேகத்தை ஆண்டிபட்டி மணிகண்டநாதன் சாமிகள் வைதீகமுறைப்படி ஆகமவிதிப்படி நடத்தினார் .

 

கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தின் உயரே வானத்தில் மேகக் கூட்டத்தின் நடுவே கருடபகவான் வட்டமிட்டு பறந்தது நிகழ்ச்சிக்கு ஆசி வழங்கியது போல் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது . விழாவில் தேனி மற்றும் மதுரை மாவட்டப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . அனைவருக்கும் கும்பாபிசேக புனிதநீர் ஊற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது .

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )