BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தல் – பாஜக பொதுச் செயலாளர் கைது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் . பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவரை கைது அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் திருச்சி மாவட்டம்
ஒ.கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் செந்தில்குமார் (37) என தெரியவந்தது. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார்.

 


குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் துறையூர் காவல்துறையுடன் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர்
செந்தில்குமார் மீது
வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )