மாவட்ட செய்திகள்
நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (பிப்.12) 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவாரூர் மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விடுமுறை அறிவித்துள்ளார்.தொடர் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மாவட்ட ஆட்சியர் லலிதா விடுமுறை அறிவித்துள்ளார்.
CATEGORIES நாகப்பட்டினம்