மாவட்ட செய்திகள்
தேமுதிக கொடி நாள் – கம்பங்களி புதிய கொடியேற்றிய இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்.
தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து கட்சிக்கான கொடி வடிவமைக்கப்பட்டது.
கொடி வடிவமைக்கப்பட்ட
நாட்களை வருடம்தோறும் கொடி நாளாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 22 வது
ஆண்டை முன்னிட்டு இன்று காலை திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்
டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் கட்சியின் புதிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் திருப்பதி, செயற்குழு உறுப்பினர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், வெல்லமண்டி காளியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி