மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% அனைவரும் வாக்களிப்பு என்பதை உணர்த்தும் வகையில் ரங்கோலி கோலம் வரைந்து உறுதி மொழி ஏற்றனர்
தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பாக வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் ராட்சத ரங்கோலி கோலம் வரைந்தனர்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தல் அலுவலர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர்,பேரூராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோர் 100% வாக்களிக்க வரையப்பட்ட ரங்கோலி கோலத்தைச் சுற்றி நின்று 100% வாக்களிக்க உறுதி மொழி ஏற்றனர்.
CATEGORIES காஞ்சிபுரம்