மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் சிவசேனா கட்சி நகர பொறுப்பாளர்கள் நியமனம்.
தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் நகர பொறுப்பாளர்கள் நியமனம் இன்று தேனில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர் கருப்பையா முன்னிலையிலும் மாவட்ட பொருளாளர் கணேசன்,மாவட்ட துணைத்தலைவர் கலைச் செல்வம் ஆகியோர் தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிவசேனா கட்சியின் தேனி நகர தலைவராக பாண்டி, நகர துணைத் தலைவராக காளிதாசன் மற்றும் பாண்டி செல்வம், நகரச் செயலாளராக மனோஜ் குமார், மற்றும் இளைஞர் அணி நகர செயலாளராக வீரையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் சால்வை அணிவித்து கட்சிப் பணிகள் குறித்தும் மற்றும் தேச பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது குறித்த ஆலோசனைகள் வழங்கினார். இதில் சிவசேனா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
CATEGORIES தேனி