மாவட்ட செய்திகள்
தஞ்சை செய்தி
தஞ்சையில் திமுக பிரமுகரிடம் இருந்து மாநகராட்சி மீட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 44ஆயிரம் சதுரஅடி நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில் பாரம்பரியம்மிக்க சுதர்சன சபா என்கிற நாடக சபை இருந்தது. 95 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்து அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகள் விதிகளை மீறி நடத்தி வந்தனர்.
மேலும் ஒப்பந்த தொகை 20 கோடி மாநகராட்சி செலுத்தவில்லை. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் கடந்த 15 நாட்கள் முன்பே இடத்தை நீதிமன்ற உத்தரவுபடி கைப்பற்றினர். இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 100 கோடி என கூறப்படுகிறது.