மாவட்ட செய்திகள்
வேலுநாச்சியார் அலங்கார ஊர்த்தி வேலூர் வந்தது.
வேலுார்:வேலுநாச்சியார் அலங்கார ஊர்த்திக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்த்தி வேலுாருக்கு இன்று மாலை வந்தது. மாவட்ட எல்லையான மாதனுார் அருகே கூத்தப்பாக்கத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா, எஸ்.பி., ராஜேஸ் மலர் துாவி வரவேற்றார்.
இந்த ஊர்த்தி அணைக்கட்டு, காட்பாடி, மேல்பாடி, வள்ளிமலைக்கு செல்லும். பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
CATEGORIES வேலூர்