BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சரணாலயங்களுக்கு வெளிநாட்டுபறவைகள் வருகை அதிகரிப்பு.

ராமநாதபுரம்–ராமநாதபுரம் வனத்துறை சார்பில், சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடந்த கணக்கெடுப்பில் கடந்த 5 ஆண்டுகளை விட, இந்த சீசனில் அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, சக்கரக்கோட்டை, மேலசெல்வனுார் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன.

இவ்விடங்களில் பிப்.,12, 13ல் இரண்டாம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. வனஉயிரின காப்பாளர் பகான்ஜக்தீஸ் சுதாகர், உதவி வன அலுவலர் கணேசலிங்கம், ரேஞ்சர் ஜெபஸ் மேற்பார்வையில், சென்னை, மதுரையைச் சேர்ந்த 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், ”சரணாலயம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளன.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )