மாவட்ட செய்திகள்
தஞ்சையில்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
வாலிபர் கைது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு இ.பி.காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ரேவதி (வயது 27). சம்பவத்தன்று இவர் மாதாக்கோட்டை டி.எம்.எஸ்.எஸ். சாலையில் மருந்து வாங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ரேவதியின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சியடைந்த ரேவதி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தஞ்சை தமிழ்பல்கலை கழகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது பற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்மு விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை காந்திநகரை சேர்ந்த சரத்குமார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரத்குமாரை கைது செய்தனர்.