மாவட்ட செய்திகள்
தஞ்சை, பிப்.15- தனது கணவர் மீது பொய் புகார் போட்டு கைது செய்துள்ளனர் என்று கூறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தனது கைக்குழந்தையுடன் வந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் செய்து மனு பெட்டியில் தங்களின் மனுவை போட்டனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடப்பது வழக்கம், கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு பெட்டியில் மனுக்கள் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தனது கைக்குழந்தையுடன் பாபநாசம் தாலுக்கா பசுபதி கோவில் மணல் மேட்டுத் தெருவை சேர்ந்த கனிமொழி மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 20 பேர் வந்தனர்.
பின்னர் கனிமொழி தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரித்தனர். பின்னர் மனுவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு பெட்டியில் சேர்க்க அறிவுறுத்தினர். தொடர்ந்து கனிமொழி தனது மனுவை பெட்டியில் போட்டார். மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
என் கணவர் அழகேசன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளராக கடந்த 7 ஆண்டுகளாக உள்ளார் கட்சியில் உள்ளதால் மக்கள் பிரச்சினை தீர்த்து வைத்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி எங்கள் சமூக பொறுப்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. அப்போது அய்யம்பேட்டை போலீசார் வந்து நாட்டாமைகளை ஒருமையிலும் திட்டினர். இதுகுறித்து கேட்ட எனது கணவர் அழகேசன் மீது உண்மைக்கு புறம்பாக ஜாமீனில் 6T6001 37/2022, 294 (B), 353,3071PC 3(1) TPPDL ACT வழக்கு போட்டு உள்ளார்கள்.
எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.