மாவட்ட செய்திகள்
உறவினர் வளைகாப்பு விழா விற்கு சென்று திரும்பிய ஓய்வு பெற்ற ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் வரும் போது லாரி மோதி விபத்தில் பலி.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குற்றம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் கரட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் வேறு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்
இதில் அரியபத்தாம்பட்டி என்ற பகுதியில் உறவினர் இல்ல வளைகாப்பு விழா விற்கு சென்று தனது சொந்த ஊரான குட்டத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி என்ற இடத்தில் ஓசூரில் இருந்து மதுரைக்கு பீன்ஸ் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்
இச்சம்பவத்தில் லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் சேர்ந்த விஜய் 25 என்பவரை கைது செய்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
CATEGORIES திண்டுக்கல்