BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர் .

இந்நிலையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி சார்பாக சிலர் வீட்டிற்கு தெரியாமல் காதல் வலையில் விழுந்து விபரீதமான முடிவுக்கு செல்லும் அபாயம் இருப்பதாக கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் தேங்காய் பழத்துடன், மாலைகளை சுமந்தவாறு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க உலா வந்தனர் .

இவர்களை கண்ட காதல் ஜோடியினர் அவர்கள் கண்களில் படாமல் ஓட்டம் பிடித்தனர்.இந்த நிகழ்வில் இந்துமுன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )