BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொரோனா தடுப்பு உபகரணங்களை பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

கிருஷ்ணகிரி நகராட்சி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் உள்ள 424 வாக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா நோய்தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வரும் 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஓசூர் மாநகராட்சியில் உள்ள 248 வாக்கு சாவடி மையங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி உள்ள 66 வாக்கு சாவடி மையங்கள் மற்றும் 6 பேரூராட்சியில் உள்ள 110 சாவடிமையங்களில் 3 இலட்சத்து 58 ஆயிரத்து 083 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குச்சாவடி தலைமை நிலைய அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் முகவர்கள் ஆகியோர் வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தெர்மல் ஸ்கேனர், முககவசங்கள், கிருமி நாசினி, கையுறை, பாதுகாப்பு கவச உடை உட்பட பல்வேறு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு பிரித்து வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜயசந்திர பானு ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )