மாவட்ட செய்திகள்
திருச்சி
உளுந்து மாவே இல்லாமல் வடை சுட முடியும் என்றால் அது பாரத பிரதமர் தான்.
ரவையே இல்லாமல் உப்புமா கிண்ட முடியும் ஆனால் அது எடப்பாடி பழனிச்சாமி,
அரிசியை இல்லாமல் பிரியாணி கிண்ட முடியும் என்றால் அது பாஜக அண்ணாமலை
என திருச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலாய்த்த திண்டுக்கல்
ஐ.லியோனி
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுயேச்சைகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக கட்சியின் தலைவர்கள், பேச்சாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பாடநூல் கழக வாரியத்தலைவர் திண்டுக்கல் லியோனி பாலக்கரை வாக்கு சேகரித்து பேசும்போது.
திமுக மாநாட்டில் முதன் முதலாக என்னை பேச வைத்தது தற்போதைய நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு எனக்கும் திருச்சிக்கும் நிறைய நெருக்கம் உண்டு.
பாரத பிரதமர் மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் திருக்குறளை தான் சொல்வார். சென்னை ஐஐடி க்கு வந்தபோது உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின் செல்வார் என கூறிய பாரத பிரதமர் போராடிய விவசாயிகள் 140 பேர் உயிர்களை எடுத்து தமிழகத்தில் வாழ்ந்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என கூறுகிறார்.
உளுந்து மாவே இல்லாமல் வடை சுட முடியும் என்றால் அது பாரத பிரதமர் தான்,
ரவையே இல்லாமல் உப்புமா கிண்ட முடியும் ஆனால் அது எடப்பாடி பழனிச்சாமி,
அரிசியை இல்லாமல் பிரியாணி கிண்ட முடியும் என்றால் அது பாஜக அண்ணாமலை,
முதல் மூன்று பேரும் விடிய விடிய கூட்டணி பேச்சுவார்த்தை கடைசியில் ஜீரோ தான். அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக போட்டியிட்டு இருந்தாலும்
ஜீரோ தான்.
பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்தை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.
பெண்ணுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்தவர் திமுகவின் தாய் கட்சியான நீதி கட்சி தான்.
பெண்களுக்கு சொத்துரிமை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர் தான்.
50% அரசியல் உரிமையை பெற்றுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்.
பாரதப் பிரதமர் விவசாயிகளைப் பற்றி பேசுகிறார் ஆனால் விவசாயிகளுக்கு எதுவும் செய்வதில்லை.
பழனிச்சாமி பி..பி என போட்டிருக்கிறார். பப்ளிக் பிராகாகீயூட்டர் என
நினைத்தேன் ஆனால் நமது தலைவர் கொடுத்திருக்கிறார் பச்சை பொய் பழனிச்சாமி என
மதத்தால் நாட்டை பிரிக்கலாம் என நினைக்கிறது பாரதிய ஜனதா.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
இப்போதல்ல, எப்போதுமே பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைய முடியாது எனவும் ராகுல் காந்தி கூறினார்.
இப்ப நான் செல்கிறேன் முட்டை தான் காரணம்
தற்போது மேடையில் இந்து, கிறிஸ்துவர் இஸ்லாமியர் என்று தமிழால் ஒரே மேடையில் இணைந்துள்ளோம் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய லியோனி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.