மாவட்ட செய்திகள்
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை தஞ்சாவூரில் அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
கொத்தடிமைத் தொழிலாளர்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் என கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து வருகின்றனர் அதன்படி தஞ்சாவூரில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்