மாவட்ட செய்திகள்
ஆத்தூர்
(சேலம் மாவட்டம் )
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5,6,8,15 ஆகிய நான்கு வார்டுகளில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்,
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5வது வார்டில் வனிதா பாலன், 6வது வார்டில் வளர்மதி கண்ணன், 8வது வார்டில் ஜெயமணி சுதாகர், 15வது வார்டில் ராதா லட்சுமி ஆகியோர்கள் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஏ.ஆர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் ஆத்தூர் நகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்,
அப்போது முதியோர்களுக்கு உதவித்தொகை, சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தெருவிளக்கு, சிமென்ட் சாலை ,மேட்டூர் குடிநீர் தடையின்றி வழங்குவேன் என்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க வார்டு பகுதிகளில் சிசிடி கேமராக்கள் பெருத்தப்படும் என்றும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் எனவும் பல்வேறு வாக்குருதிகளை அளித்து முரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்,
இதில் நகர கழக செயலாளர் சீனிவாசன், கேப்டன் மன்ற மாநில துணைசெயலாளர் சுல்தான் பாஷா, தெற்கு ஒன்றியகழக செயலாரும் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவருமான கன்னியப்பன், நகர அவைத்தலைவர் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட கழக பொருப்பாளர்களும் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.